சென்னை:சி.பா.ஆதித்தனார் 43வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான்,"முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது. அணை பலவீனமாக இருக்கிறதெனில் இரு மாநில அரசுகளின் ஒப்புதலோடு, நிதி பங்கீட்டுடன் அணைக்குள் ஓர் அணை கட்டலாமே? அதை விடுத்து ஏன் இடித்துக் கட்ட வேண்டும்? எனவே, முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணைக்கட்டுவதை ஏற்க முடியாது" என்றார்.
திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவர்கள் காவி உடை போடுவார்கள், இவர்கள் கருப்பு உடை போடுவார்கள். நாங்க இரண்டையும் கிழித்து தூரம் போடுவோம். அதற்கு வெகுநாட்கள் இல்லை. அதிகாரத்தில் இருப்பதால் இதுபோன்று செய்து வருகிறார்கள். எங்கள் வள்ளுவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? திராவிடத்துக்கும், வள்ளுவனுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பிரதமர் மோடி ராமர், ராமர் என சொன்னார் எடுபடவில்லை, இப்போது தன்னையே ராமர் என கூறிக் கொள்கிறார். அவர் கோயில் கட்டவில்லை, அவருக்கு வீடு கட்டிக்கொண்டார்.