தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நிலங்களிலிருந்து ரூ.198 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் திருட்டு.. நீதிமன்றம் காட்டம்! - TAMILNADU TEMPLE LAND MISUSE - TAMILNADU TEMPLE LAND MISUSE

TAMILNADU TEMPLE LAND MISUSE: கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் 198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக இந்த சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 3:06 PM IST

சென்னை:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சேலத்தில் உள்ள கோயில்களுக்குs சொந்தமான நிலங்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கூடுதல் அரசு பிளீடர்கள் யு.பரணிதரன், ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகினர். அப்போது, அறநிலையத்துறையின் கிருஷ்ணகிரி மாவட்ட உதவி கமிஷ்னர் எம்.ஜோதிலட்சுமி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அறநிலையத்துறை உதவி கமிஷ்னர் தாக்கல் செய்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கையில், தேன்கனிக்கோட்டை நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 28 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கற்கள் திருடப்பட்டுள்ளது என்றும், கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேஹூலி பட்டாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து 170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலங்களுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் செல்ல முடியாமல் சமூக விரோதிகள் தடுத்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ள விவகாரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த திருட்டுகளில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. தேசத்துக்குச் சொந்தமான சொத்துக்களை திருடுபவர்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் முன்வந்துள்ளது. ஒருசில பேராசைக்காரர்களால் தேசத்தின் சொத்தை அபகரிப்பதை ஏற்க முடியாது.

எனவே, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கோயில்களின் சொத்துக்களில் உள்ள கனிம வளங்களை சட்டவிரோதமாக திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் சரக காவல்துறை டிஐஜிக்கு உத்தரவிடப்படுகிறது.

அவர் இந்த கனிம வள திருட்டு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை? எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து ஜூலை 26ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விண்டோஸ் சேவை பாதிப்பு: சென்னையில் 16 விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி! - chennai airport

ABOUT THE AUTHOR

...view details