சென்னை:கோடைகாலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தைப் போக்குவதற்காக, தமிழ்நாட்டின் அனைத்து பகுதி மக்களும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
கோடை விடுமுறையையொட்டி, பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இதனிடையே, ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு செல்ல விரும்புவோர் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் எடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து தமிழக அரசின் வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை ஆகிய துறைகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:புல்வெளி மைதானத்திற்குள் செல்ல தடை.. ஊட்டி தாவரவியல் பூங்கா நிர்வாகம் அதிரடி!