சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில், 3,302 மையங்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த சுமார் 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர்.
இதனையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணியில், 86 மையங்களில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன் பின்னர், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசுத் தேர்வுத்துறை தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2024 மார்ச் 12ஆம் வகுப்பு நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி, பேராசிரியர் அன்பழகன் கல்வி வாளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.