சென்னை:வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விவகாரத்திற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் இல்லம் மற்றும் அமைச்சர்கள் இல்லங்கள் பொதுமக்களால் சூறையாடப்பட்டன. அங்குள்ள இந்துக்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டது.