திருநெல்வேலி: இந்து மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், நெல்லை மாவட்ட இந்து முன்னணியின் முன்னாள் செயலாளருமான உடையார், நெல்லை புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் உடன் பேசிய ஆடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பேசிய உடையார், "அவர் இந்து முன்னணி, பிஜேபி தலைவர்களை கடுமையாக விமர்சித்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடைபெற்றதாகவும், அதனால் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை பாரதிய ஜனதா கட்சியினர் செலவழிக்காமல் வைத்து விட்டார்கள் என குற்றம் சாட்டினார். அதற்கு, நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், நயினார் நாகேந்திரன் கட்சிக்காரரைப் பார்த்து ரூபாய் கொடுக்கவில்லை எனவும், அவரது சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என ஒரு தனி டீமாக அமைத்து அதன் மூலம் தான் பணம் விநியோகம் செய்யப்பட்டது. சொந்தக்காரர்கள் கட்சி உறுப்பினர்களை மதிக்கவில்லை, எனவே தான் பிரச்னை என பதில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்துக்கள் அனைவரும் பைத்தியக்காரர்களாக உள்ளார்கள். கரு நாகராஜன் சரத்குமாருடன் கட்சியில் இருந்தார். இன்றைக்கு அவருக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சாதி ரீதியாக பிஜேபியை அழிக்க முடிவு பண்ணி விட்டார்கள். ஆனால், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தை மேடைக்கு அழைக்கவில்லை. 38 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். அவரை பிஜேபியினர் புறக்கணித்து விட்டனர் என மனக்குமுறலோடு உடையார் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த பி.ஜே.பி மாவட்ட தலைவர், பாரதிய ஜனதா கட்சியில் கடற்கரைகாரர்களையும், கிறிஸ்தவர்களையும், சிறுபான்மையினரையும் மத்தியில் பணம் கொடுத்து பிரச்சாரம் செய்ய சொல்கிறார்கள். அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள். அதற்கு பதில் பல இந்துக்கள் வாழும் பகுதிகளில் பிஜேபி செல்லவே இல்லை, அங்கு செல்ல வேண்டும் என்பது தான் என் கருத்து என அவர் தெரிவித்தார்.