மதுரை: தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தஞ்சாவூர் வல்லம் கொட்டாரத் தெருவில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். நான் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளேன். எனவே, நான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக்கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது" என கூறினார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி, "தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது. இவ்வாறு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க இயலாது என சிறிய எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளோம் என கூறுவது, சிகரெட் கம்பெனி கூட தான் புகைபழக்கம் உடல்நலத்திற்கு கேடு, என சிறிய அளவில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.