தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சொர்க்கவாசல்' ஓடிடி ரிலீஸை தடை செய்யக் கோரிய மனு - பரிசீலனை செய்ய மதுரை அமர்வு உத்தரவு! - SORGAVASAL

சொர்க்கவாசல் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்கக் கோரிய மனுவை, திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம்
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 8:58 AM IST

Updated : Jan 7, 2025, 11:23 AM IST

மதுரை:சொர்க்கவாசல் (Sorgavaasal) திரைப்படத்தை Amazon போன்ற ஓடிடி பொது ஊடகங்களில் வெளியிடத் தடை விதிப்பதோடு, சொர்க்கவாசல் படத்தின் வெளியீட்டாளர், இயக்குநர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர், தமிழ்நாடு அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த நவம்பர் மாதம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'சொர்க்கவாசல்' என்ற திரைப்படம் வெளியானது. இதில், முக்கிய கதாபாத்திரத்திற்கு கட்டபொம்மன் எனப் பெயர் சூட்டப்பட்டு, நடிகர் கருணாஸ் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மது, போதைப் பொருட்கள் போன்றவற்றை அந்த கதாபாத்திரம் விற்பனை செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு விடுதலைப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், சொர்க்கவாசல் படத்தில் அவரது பெயர் தவறான செயல்களை செய்யும் கதாபாத்திரத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"கொடைக்கானல் சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியில் சாலை?" - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சொர்க்கவாசல் படத்தை ஓடிடி (OTT) போன்ற பொது ஊடகங்களில் வெளியிடத் தடை விதிப்பதோடு, சொர்க்கவாசல் படத்தின் வெளியீட்டாளர், இயக்குநர் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு நேற்று (ஜன.6) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், மனுதாரரின் மனுவை திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை முதன்மைச் செயலர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Last Updated : Jan 7, 2025, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details