மதுரை:மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து தொடர்பாக
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மதுரை மத்திய சிறையில் 1,252 கைதிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், 2 ஆயிரத்து 379 சிறை கைதிகள் இருக்கின்றனர். இதனால் கைதிகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதோடு அனைத்து கைதிகளையும் ஒன்றாக வைத்திருப்பதால், காவலர்களுக்கு கண்காணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், சிறிய குற்றங்கள் செய்தவர்கள், பெரும் குற்றவாளிகளுடன் சேர்ந்து சமூக குற்றவாளிகளாக மாறும் அபாயம் உள்ளது.
மதுரை இடையபட்டி கிராமத்தில் புதிய மத்திய சிறையை அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தெத்தூர் முதல் கரடிக்கல் இடையிலான பகுதி அடையாளம் காணப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மதுரை மத்திய சிறைக்கு புதிய இடம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக கூட்டம் காரணமாக சிறை கைதிகள் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தை அடையாளம் காணாமல் உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே சிறை கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளை எடுக்கவும், மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.