தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரக்கோணம் கடற்படை விமானத் தளத்தில் ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு! - Helicopter pilot training - HELICOPTER PILOT TRAINING

INS Rajali Air Station: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளியில் முதல் பெண் கடற்படை ஹெலிகாப்டர் பைலட் உட்பட 21 பேருக்கு ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

டிரெயிண்ங்கில் சிறந்து விளங்கிய பைலட் விருது பெற்றுக்கொண்ட புகைப்படம்
பயிற்சியில் சிறந்து விளங்கிய பைலட் விருது பெற்றுக்கொண்ட புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 10:11 PM IST

Updated : Jun 7, 2024, 10:24 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இயங்கி வரும் இந்திய கடற்படை விமானத் தளத்தில் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி பள்ளியில் 102வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

கடற்படை விமானத் தளத்தில் நடைபெற்ற விமானி பயிற்சி நிறைவு விழா (credits - ETV Bharat Tamil Nadu)

இதில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் (Vice Admiral Rajesh Pendharkar) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, இப்பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதில், பாலின உள்ளடக்கம் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இந்திய கடற்படையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், ‘முதல் பெண் கடற்படை ஹெலிகாப்டர் பைலட்' பட்டத்தை அனாமிகா பி.ராஜீவ் பெற்று வரலாற்றை உருவாக்கினார்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் இருந்து முதல் ஆணையிடப்பட்ட கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் ஜாம்யாங் செவாங் ஒரு தகுதி வாய்ந்த ஹெலிகாப்டர் பைலட்டாக பட்டம் பெற்றார். ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங்-இன்-சீப் (the flag officer commanding in chief) -ஆல், பயிற்சியில் சிறந்து விளங்கிய பைலட்க்கு, இஸ்ட் நாவல் கமாண்டிங் ரோலிங் டிராஃபி (eastern naval command rolling trophy) வழங்கப்பட்டது.

சப் லெப்டினன்ட் குண்டே நினைவு புத்தகப் பரிசு, (standing first in order of merit in ground subjects) தரைத்தள பயிற்சியில் வெற்றி பெற்றவருக்கு வழங்கப்பட்டது. கேரள ஆளுநர் ரோலிங் டிராபி, அனைத்து பயிற்சியிலும் சிறப்பாக செயல்பட்டவருக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:“நேரு உடன் ஒப்பீடா.. இவிஎம் இயந்திரத்துக்கு எதிர்ப்பு இல்லையே..” - ப.சிதம்பரம் அளித்த பதில் என்ன? - P Chidambaram

Last Updated : Jun 7, 2024, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details