தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.. வியந்து பார்த்த கிராம மக்கள்! - Helicopter landing - HELICOPTER LANDING

Helicopter Landing: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பொற்பந்தல் கிராமத்தில் இன்று திடீரென மிகப்பெரிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்
தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 9:33 PM IST

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே பொற்பந்தல் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இன்று திடீரென மிகப்பெரிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து அப்பபகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரும் குவியத் துவங்கினர். இந்த நிலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் என தெரியவந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விவசாய நிலத்தில் தர இறங்கியதா? அல்லது ஹெலிகாப்டர் தரை இறங்குவதும் பயிற்சியில் ஒரு அங்கமா பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். பின்னர் 3 மணி நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக இதேபோல் கடந்த மாதம் சாலவாக்கம் பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :ஈடிவி பாரத் செய்தி எதிரொலி..பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய அறக்கட்டளை! - govindarajapuram disabled person

ABOUT THE AUTHOR

...view details