தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை.. கூலிங்கான திண்டுக்கல்! - Dindigul Rain - DINDIGUL RAIN

Dindigul Rain: திண்டுக்கல்லில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Dindigul Rain
திண்டுக்கல்லில் பெய்த மழை புகைப்படம் (credits - etv bharat tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 9:39 PM IST

திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் அளவு சுமார் 105 டிகிரி வரை இருந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திண்டுக்கல், மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மாலை 6:30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் இன்று அதிகாலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக, வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவித்த மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதன்படி, திண்டுக்கல் பேருந்து நிலையம், காட்டாஸ்பத்திரி, எம்விஎம் கல்லூரி, செட்டிநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம், தோமையார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு 2024; “இயற்பியல் சற்று கடினம்.. உயிரியல் ஈசி” - மாணவர்களின் கருத்து என்ன? - NEET Exam Student Review

ABOUT THE AUTHOR

...view details