விருத்தாசலம்:கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த நபரின் மகள் கடந்த ஆண்டு எருமனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவி படிக்கும் போது பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு தலைமையாசிரியர் முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் லீக் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற தலைமை ஆசிரியர் காரை வழிமறித்து தனது பிள்ளையிடம் தகாத முறையில் இருந்ததை கண்டித்து அவரை சரமாரி தாக்கி அரை நிர்வாணமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமை ஆசிரியரை மீட்டனர். ஆனாலும், ஆத்திரம் அடங்காத உறவினர்கள் தலைமையாசிரியருக்கு உதவியாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி பள்ளியின் முன்பு விருத்தாசலம் முகாசாபரூர் செல்லும் கிராமப்புற வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.