மதுரை:புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சேர்ந்த மலையாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நான் 13 நாட்டு ரக ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருகிறேன். கடந்த ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தை மாதம் முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் அருகாமை மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி அளிக்காத நிலையில் கோயில் திருவிழாக்களும் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்விதப் பதிலும் இல்லை.