மதுரை:சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழக்கக் கோரி, கண்டரமாணிக்கம் பகுதி ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் பெரியதம்பி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 16 முதல் 25ஆம் தேதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த கோயிலின் 116ஆம் ஆண்டு விழாவும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் விழாவின் இறுதி நாளன்று, சிறுமருதூர் கண்மாய் பொட்டல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அந்த வகையில், கண்டரமாணிக்கம் கிராமம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசிதழில் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்ற போது, இணையதளம் முடங்கி இருந்தது.