மதுரை:மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், கடந்த மார்ச் 28ஆம் தேதி குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. முதல் நிலை தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 7 நாட்களுக்கு உள்ளாக குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 6 வினாக்களில் மொழி பெயர்ப்பு தவறுகள் இருந்ததால், அதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்திருந்தேன். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதோடு, 6 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கண்ணன் தனது மனுவில் கூறியிருந்தார்.