தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மூன்று மாவட்டங்களில் ஒத்திபோகும் அரையாண்டு தேர்வு! ஜன.2 இல் தொடக்கம்! - HALF YEARLY EXAM POSTPONED

ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 10:47 PM IST

சென்னை:ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரையாண்டு தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உத்தரவின்படி, ஃபெஞ்சால் புயலின் (Fengal cyclone) மழை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன்கருதி நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வுகள் இம்மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை 02.01.2025 முதல் 10.01.2025 ஆம் தேதிக்குள் நடத்திடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்டுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மழை தீர் வடிந்த பிறகு முறையாக பள்ளி திறக்கும்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்திடவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை முடித்திடவும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்கிட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இம்மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறைக் காலம் 24.12.2024 முதல் 01.01.2025 வரை பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது" என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details