தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சமுகத்தை வழி நடத்தும் தகுதி திருமாவளவனுக்கு இல்லை" - எச்.ராஜா விளாசல் - H Raja on thirumavalavan manaadu - H RAJA ON THIRUMAVALAVAN MANAADU

தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திருமாவளவன் அநாகரிகத்தின் உச்சகட்டத்தில் பேசியுள்ளார், அவர் தமிழக அரசியலில் கரும்புள்ளியாக இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

எச். ராஜா, திருமாவளவன்
எச். ராஜா, திருமாவளவன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 8:51 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பாஜக வழிகாட்டு குழு தலைவர் எச்.ராஜா தலையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறுகையில், "சென்னை மெட்ரோ திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சரை போல் தமிழக பாஜக தலைவரும் பிரதமருக்கு இந்த நிதியை தரக் கூறி கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் 10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

எச். ராஜா பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

மது ஒழிப்பு மாநாடும் விமர்சனமும்: திருமாவளவன் நடத்திய மது ஒழிப்பு மாநாடு நோ பால் போட்டு ரன் எடுப்பது போன்ற மாநாடு. அந்த மாநாட்டில் திமுக விசிகவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு மது கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தமிழகத்தில் சாராய மரணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 28 பேர் உயிரிழந்தார்கள். இந்த ஆண்டு 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநாட்டின் நோக்கம் மக்களை திசை திருப்புவது.

இதையும் படிங்க:"விஜய்-க்கு எதுக்கு கட்சி? காங்கிரஸ் அல்லது திமுகவில் சேர்ந்திடலாம்" - ஈவிகேஎஸ் இளங்கோவன் யோசனை!

சமுதாயத்தை நடத்தும் தகுதி திருமாவிற்கு இல்லை:இந்த மாநாட்டில் பெண் காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அநாகரிகமான காட்சிகள் விசிக மாநாட்டில் நடந்துள்ளது. இதன் மூலம் விசிக அநாகரிகமான கட்சி என்பதும் சமுதாயத்தை வழி நடத்தும் தகுதி திருமாவளவனிடம் இல்லை எனவும் தெரிய வருகிறது. மேலும் தமிழக பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை செளந்தரராஜன் குறித்து திருமாவளவன் அநாகரிகத்தின் உச்சகட்டத்தில் பேசியுள்ளார். தமிழக அரசியலில் கரும்புள்ளியாக திருமாவளவன் இருக்கிறார்.

தமிழ் சமூகத்தை அழிக்கும் திமுக:குடிபழக்கத்தை குடியை மறந்த தமிழனை குடிக்க வைத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அடுத்த தலைமுறை தமிழனை சீரழித்தது திராவிட மாடல் அரசியல். பள்ளிக்கூட வாசலில் கஞ்சா பொட்டலங்கள் விற்கப்படுகிறது திமுக தலைவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவில் போதை பொருள் அணி என அணியை உருவாக்க வேண்டும் தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல் படுகிறது.

அவர்கள் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கல்வி:இருமொழி கொள்கை என பேசிவிட்டு முதல்வர் மகள் நடத்தும் பள்ளியில் இரு மொழி கொள்கை கடைபிடிக்கப்படவில்லை. ஏழை மக்கள் குழந்தைகளுக்கு இருமொழி கல்வி அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களின் குழந்தைகளுக்கு மும்மொழி கல்வி பயில்வது என்ன நியாயம் வீட்டுக்கு மும்மொழி தமிழ்நாட்டுக்கு இரு மொழி கொள்கையா?

விஜய் இந்து உணர்வை காயப்படுத்தினார்:விஜய் மாநாட்டிற்கு பூர்வாங்க பணிகள் இந்து முறைப்படி நடத்தப்பட்டது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த எச்.ராஜா தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆண்டவனை வழிபடுவது வேறு இந்து உணர்வை மதிப்பது என்பது வேறு. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இந்து உணர்வை காயப்படுத்தி விட்டு இன்று நடத்தப்பட்ட பூஜையால் எதுவும் மாறிப்போகாது என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details