சென்னை: இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ளார். சமீப காலமாக திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான இவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆனது.
இவரும் அவரது பள்ளித் தோழியான சைந்தவியும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் சைந்தவி தம்பதியினர் தங்களது 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்ததாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.