தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு! தேர்வர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! - TNPSC GROUP 4 RESULT

8 932 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்(கோப்புப்படம்)
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்(கோப்புப்படம்) (Credit - TNPSC)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 2:24 PM IST

Updated : Oct 28, 2024, 2:39 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 8 ஆயிரத்து 932 பணியிடங்களை நிரப்புவதற்கு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது எனவும், https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர் , இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2023 ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டது.

பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை மொத்தம் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர். 4 லட்சத்து 45 ஆயிரத்து 115 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.

இந்த நிலையில் இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர்த்தியது. 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது.

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் 400, இளநிலை உதவியாளர் பிணையற்றது 3 ஆயிரத்து 458, இளநிலை உதவியாளர் பிணை உள்ளது 69, பில் கலெக்டர் 99, தட்டச்சர் 2 ஆயிரத்து 360, சுருக்கெழுத்தர் நிலை 3 ல் 642, இளநிலை உதவியாளர் வக்பு வாரியம் 32, சுருக்கெழுத்தர் நிலை 3, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையம், கூட்டுறவு நிறுவனங்களில் 17, தடயவியல் துறையில் 32, வனத்துறையில் 216, வீட்டுவசதி வாரியம் 22 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான இடம் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதே நேரத்தில் தேர்வு தொடர்பான மேலதிக தகவல்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதால் இதனை தொடர்ந்து பார்வையிடுமாறும் தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Last Updated : Oct 28, 2024, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details