தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டூரில் 5,947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையம்; பணிகளை தொடங்கிய கிரீன்கோ நிறுவனம்! - Greenko Group salem company - GREENKO GROUP SALEM COMPANY

Mettur Greenko Panel Power Station: சேலம் மாவட்டம், மேட்டூரில் 5,947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையத்தை அமைக்கும் முதல்கட்டப் பணிகளை கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

மேட்டூரில் நீரேற்று புனல் மின் நிலையம்
மேட்டூரில் நீரேற்று புனல் மின் நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 1:20 PM IST

சேலம்:இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.20,114 கோடி முதலீடு மற்றும் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை (Closed loop pumped storage projects) நிறுவுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பாலமலை மற்றும் நவிப்பட்டி கிராமத்தில் இந்த மின் நிலையம் அமைய உள்ளது. இதற்காக, நிலைய கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எனர்ஜீஸ் நிறுவனம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது.

தமிழக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஏழே நாட்களில், முதல் கட்டப் பணிகளையும் கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி.. அமெரிக்காவில் வாழை படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details