தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் டிரம்மில் போட்டு கொன்ற தாத்தா.. போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்! - ariyalur infant murder - ARIYALUR INFANT MURDER

ariyalur baby murder: அரியலூர் அருகே சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் கடன் பிரச்சனை ஏற்படும் என கருதி தாத்தாவே பேரக்குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட வீரமுத்து
கைது செய்யப்பட்ட வீரமுத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 4:53 PM IST

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து - ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வந்து இருந்துள்ளார். கடந்த 14ம் தேதி அதிகாலையில் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கதறிய தாய்:வீட்டை சுற்றி தேடி பார்த்தில் வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த கிடப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார். பின்னர் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.

குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சந்தேகம் எழுந்து, தாத்தா வீரமுத்துவை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி வாக்குமூலம்: இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சங்கீதாவின் குழந்தை சித்திரை மாதம் (6.5.24) பிறந்ததால், வீரமுத்து குடும்பத்திற்கும், சம்மந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்று பலரும் கூறியுள்ளனர். மேலும், வீரமுத்து சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கியதாலும் மேலும் இந்த குழந்தை பிறந்ததால் இதற்கு சீர் செய்ய வேண்டிய கடன் வாங்கியதாலும் விரக்தியில் இருந்துள்ளார்.

அத்துடன் தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ளதால் ஆண் மகன் இருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் அவனது உயிருக்கு ஆபத்து என்றும் ஆண் மகன் இல்லாததால் தாத்தாவாகிய தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் வீரமுத்துவிடம் தெரிவித்துள்ளனர்.

துடிதுடித்து இறந்த சிசு:இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமுத்து, முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது விட்டு விட்டு வந்து விடலாம் என்று எண்ணியுளார். பிறகு தன்னுடைய உயிருக்கே ஆபத்து இருப்பதாக பயந்தவர், சம்பவத்தன்று அதிகாலை குழந்தையை தூக்கிக் கொண்டு தண்ணீர் நிரம்பிய பேரலில் போட்டு போர்வையால் மூடியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அனைவரையும் எழுப்பி, குழந்தையை காணவில்லை என்று பதட்டமாக காட்டிக்கொண்டு, தானும் உடன் தேடி பேரலில் இருந்து குழந்தையை கண்டுபிடித்து சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வந்து சேர்த்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன், குழந்தையை கொன்ற தாத்தா வீரமுத்துவை கைது செய்தார். மேலும், உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை சாட்சிகள் முன்னிலையில் நடித்துக் காட்டி, போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்ற அச்சத்தின் காரணமாக தாத்தாவே 38 நாட்களை ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் காதலிக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் போன் போட்டு உயிரை பறிகொடுத்த இளைஞர்.. ஈரோடு பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details