தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திராவிட இயக்கத்தைச் சுற்றிய கதைகளைத் திரித்தது நன்றி கெட்ட செயல் - ஆளுநர் ரவி - GOVERNOR RAVI

ஆளுநர் மாளிகையின் பிரத்யேக எக்ஸ் தளப் பக்கத்தில், ‘பாஞ்சாலங்குறிச்சி போர்கள்’ புத்தக வெளியீட்டு நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், திராவிட இயக்கத்தைச் சுற்றிய கதைகளைத் திரித்தது நன்றி கெட்ட செயல் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி (X / @rajbhavan_tn)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 9:49 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘பாஞ்சாலங்குறிச்சி போர்கள்' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், நூலாசிரியர் பெ. செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மனின் வழிவந்தவர்கள் மற்றும் கட்டபொம்மன் விருது பெற்றவர்களை ஆளுநர் ரவி பாராட்டிச் சிறப்பித்தார்.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஆளுநர் ரவி சிலத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பான ஒரு பதிவை ஆளுநர் மாளிகை தங்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

‘பாஞ்சாலங்குறிச்சி போர்கள்’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆளுநர் ரவி (X / @rajbhavan_tn)

அதில், “பாரத சுதந்திர இயக்கத்தின் உண்மையான வரலாற்றை விடாமுயற்சியுடன் கூடிய ஆராய்ச்சி, அதிகம் கவனிக்கப்படாத ஆளுமைகள் மற்றும் தேசத்தில் அவர்களுக்கு சரியான இடம் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அப்போதுதான், பெருமை, நம்பிக்கை, ஆழ்ந்த தனித்துவ உணர்வுக்கு அடித்தளமிட்ட எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.”

“காலனித்துவ ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியில், ஆங்கிலேயர்கள் நமது நம்பிக்கையை குலைப்பதற்கும், நமது உண்மையான அடையாளத்தை சிதைப்பதற்கும் எவ்வாறு நமது வரலாற்றை மறைத்துத் திரித்தனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தார் என்றார் ஆளுநர் ரவி.”

ஆளுநர் மாளிகை எக்ஸ் தளப் பதிவு (X / @rajbhavan_tn)

“இந்திய சுதந்திர போராட்டத்தின் உண்மையான நாயகர்கள் குறித்த பாடங்களை படிக்க விடாமல், அவர்களின் தியாகங்களை மறைத்து, ஒடுக்குமுறை ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை மகிமைப்படுத்தி, திராவிட இயக்கத்தைச் சுற்றிய கதைகளைத் திரித்தது நன்றி கெட்ட செயல் மட்டுமின்றி, ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட என்று ஆளுநர் கூறினார்.”

இதையும் படிங்க
  1. சத் பூஜை திருநாள்: ஆளுநர் இந்தி வாழ்த்து விவகாரம்; அமைச்சர் துரைமுருகனின் நச் பதில்!
  2. அரசியல் காரணங்களுக்காக ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்
  3. ஆளுநருக்கு பாடம் எடுத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! நடந்தது என்ன?

“தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களைப் போற்றவும், அவர்களின் பாரம்பரியத்தை தேசத்தின் உணர்வில் மீண்டும் நிலைநிறுத்தவும், இந்த புத்தகம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்படுகிறது. இது வரலாற்று உண்மைகளை மீட்டெடுக்கவும், நமது கூட்டுப் பாரம்பரியத்தின் பெருமையை மீண்டும் பறைசாற்றவும் கூடிய முயற்சியாகும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details