சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது, பெண் பயணிகள் உட்பட 30 பேரை, ஒரு மாதத்திற்குள், பலமுறை இலங்கைக்கு சென்று வந்தவர்களை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அதோடு சுங்க அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் முறையாக வரி செலுத்தாமல் லேப்டாப், ஐ போன்கள், எலக்ட்ரானிக் சிகரெட், விலை உயர்ந்த மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் 30 பேர் கொண்டு வந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.