திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (55). இவர் ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் நாமக்கல் சென்று, பின்னர் அங்கிருந்து கன்னியாகுமாரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பத்மாவதி, அறையின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.