அரியலூர்:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், அன்பரசி தம்பதியினர். இவர்களுக்கு துவாரகா (வயது 15) மற்றும் இலக்கியா (வயது 12) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கோவிந்தராஜ் குடும்பத்தினர், முதல் நாள் சமைத்த சிக்கன் உணவை மறுநாள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.