சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உரிய ஆவணங்கள் இன்றியும், அபாயகரமான நாய்களை வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி ஆபத்தான நாய்கள் வளர்பவர்களைக் கண்டால் 1913என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மதுரவாயல் பகுதியில் ஜான்சன் என்பவர் ஜெர்மன் ஷெப்பர்ட் ( German Shepherd dogs) உள்ளிட்ட 5 வகை வெளிநாட்டு இன நாய்களை சட்டவிரோதமாக வளர்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர் வளர்க்கும் நாய்கள் அபாயகரமானவை என்றும், அவைகள் இரவு நேரத்தில் அதீத சத்தத்துடன் குரைப்பதால் சிறியவர் முதல் முதியவர் வரை கடும் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் நீண்டநாள்களாக் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜான்சனின் வீட்டை முற்றுகையிட்டு நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.