தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓரினச்சேர்க்கைக்குச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பரபரப்பு! - gay gang robbery - GAY GANG ROBBERY

ambattur gay gang robbery issue: அம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் வாலிபரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 2:19 PM IST

Updated : Aug 3, 2024, 9:33 PM IST

சென்னை: சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார் (34). இவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் உடையவரான இவர் ஆன்லைன் செயலி மூலம் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த வினோத் (21) என்ற வாலிபரை தொடர்பு கொண்டு ஓரினச் சேர்க்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன்படி வினோத் அம்பத்தூர் மேனாம்பேடு சர்வீஸ் சாலை அருகே உள்ள காலி மைதானத்திற்கு வருமாறு வசந்தகுமாரை அழைத்துள்ளார். அங்கு வினோத் தனது நண்பர்களான பெரம்பூரை சேர்ந்த வசந்த் (22), மேனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா (21), கருக்கு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (19) ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார்.

பின்னர் அங்கு வந்த வசந்தகுமாரை நால்வரும் சேர்ந்து அடித்து உதைத்து வசந்த குமாரிடமிருந்த செல்போனை பிடுங்கி வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு வினோத் மாற்றி உள்ளார்.

மேலும், வசந்தகுமாரின் செல்போனையும் பறித்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தகுமார் அருகே உள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத், வசந்த், ராஜா, சந்தோஷ் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:செங்கல்பட்டில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை.. போலீஸ் தீவிர விசாரணை!

Last Updated : Aug 3, 2024, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details