சென்னை:மண்ணடி பகுதியை சேர்ந்தவர் பிரபல கானா பாடகி இசைவாணி. இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி வருகிறார். மேலும், தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 2019 ஆண்டு மயிலாப்பூரில் ''I am sorry ayyappa'' என்ற பாடலை பாடினார். மேலும் இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்துள்ளார்.
இந்த பாடல் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து சர்ச்சையுமாகி எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இந்த நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், அவர் கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடிவருவதாக கூறியுள்ளார். இதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு 'I am sorry ayyappa' பாடல்களை பாடியதாகவும், சமூக வலைதளங்களில் அந்த பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்!