தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நிதி விரைவில் வழங்க நடவடிக்கை!

Compulsory Education Students Fund: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் பயிலும் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களுக்கான 389.59 கோடி ரூபாய் நிதி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 5:48 PM IST

Compulsory Education Students Fund
Compulsory Education Students Fund

சென்னை: குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் படித்து வரும் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களுக்கு 383.59 கோடி ரூபாய் நிதி பள்ளிகளுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார்ப் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையானது தமிழகத்தில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2013-2014 ஆம் ஆண்டு முதல் இந்த சேர்க்கை தொடங்கப்பட்டு, 2017-2018 ஆம் கல்வி ஆண்டு முதல் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணைய வழியாகப் பெறப்பட்டு தற்போதுவரை சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கையின் கீழ் பயிலும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத் தொகையாக 364.44 கோடி ரூபாய் அனைத்துப் பள்ளிகளுக்கும் நிலுவை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 65 ஆயிரத்து 946 குழந்தைகள் மற்றும் தொடர்ந்து பயின்று வரும் குழந்தைகள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 122 பேரையும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 68 மாணவர்களின் விவரங்களை மாவட்டங்களில் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு ஈடு செய்யும் தொகையான 383.69 கோடி ரூபாய் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகையினை விரைவாகப் பள்ளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023-2024 ஆம் கல்வியாண்டில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் தகுதியுள்ள 70 ஆயிரத்து 883 குழந்தைகள் சேர்க்கப்பட்டு, படித்து வருகின்றனர். 2024-2025 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பின்பு இதற்கான கல்விக் கட்டணம் தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் 25 லட்சம் பேருக்கு கல்லீரல் பாதிப்பு.. மதுப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details