சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் சந்தோஷபுரத்தில் வசித்து வருபவர் அஸ்வினி (31). இவர் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பனி புரிந்து வருகிறார். இவரது கணவர் குஜராத்தில் வேலை பார்த்து வரும் சூழலில் அஸ்வினி தனது தாயுடன் வசித்து வருகிறார். அஸ்வினிக்கு ஹிரிதிவ் (7) என்ற மகனும், ஹார்த்ரா (4) என்ற மகளும் இருந்த நிலையில், மகன் ஹிரிதிவ் உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார்.
இதனால் தாய் அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரையில் தூக்க மாத்திரைகளை தினமும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில். அஸ்வினி நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கையின் பக்கத்தில் மாத்திரைகளை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது எல்கேஜி படிக்கும் மகள் ஹார்த்ரா (4), தூக்க மாத்திரையை தவறுதலாக எடுத்து சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தூங்கியுள்ளனர். காலை 4 மணியளவில் எழுந்து பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்துள்ளது. பிறகு அஸ்வினி மகள் இறந்து விட்ட சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவருக்கும் தகவல் தெரிவித்து விட்டு, கழிவறைக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
காலை குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்ய பாட்டி சுதா வந்த போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அஸ்வினியும், குழந்தை நுரை தள்ளியும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.