வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா (45), அவரது மகள் லலிதா (22), அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை உட்பட 4 பெண்கள், இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் முனீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளனர்.
வழிபாடு முடிந்த நிலையில், கோயிலுக்கு அருகே உள்ள ஏரியில் 4 பெண்களும் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, 4 பெண்களும் எதிர்பாராத விதமாக சுழலில் சிக்கி மூழ்கியுள்ளனர். நீரில் மூழ்கிய 4 பெண்களும் உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.