சென்னை:திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021 ஆம் ஆண்டு பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. நடிகர் விஜய் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக தனது முகநூல் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பதிவிட்டு இருந்தார்.
மேலும், "தேவர் ஐயாவை இழிவு படுத்திய நடிகர் விஜய் சேதுபதியை, உதைப்பவருக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 1001 வழங்கப்படும்" என்றும் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், அர்ஜுன் சம்பத்தின் இந்த சமூக வலைத்தள பதிவு தொடர்பாக கடந்த 17.11.2021 அன்று பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 504 & 506 (I) பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.