முன்னாள் துணைவேந்தர் முனைவர் என்.பஞ்சநாதம் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று மாலை (பிப். 5) அந்த கல்விக் குழுவின் தாளாளர் எம்.ஐ.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது. இந்த, பட்டமளிப்பு விழா நிகழ்விற்கு வந்திருந்தவர்களை, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சண்முகநாதன் வரவேற்றார்.
மேலும், இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், புதுடெல்லி பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினரான முனைவர் என்.பஞ்சநாதம் நடராஜன் பங்கேற்று, முதுகலை கல்வியியலில் தேர்ச்சி பெற்ற 98 பேர், இளங்கலை கல்வியியலில் தேர்ச்சி பெற்ற 1,124 பேர் என மொத்தம் 1,222 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய அவர், "141 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில், உயர்கல்வி பயிலும் வாய்ப்பு வெறும் 30 சதவீதம் பேருக்கு மட்டும் தான் கிடைக்கிறது. எஞ்சிய 70 சதவீதம் பேருக்கு அவர்களுடைய குடும்ப சூழல், பொருளாதார சூழல், என பல்வேறு காரணங்களினால் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்த 30 சதவீதம் பேரில் நீங்களும் ஒருவர் என பெருமிதம் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் தாய், தந்தையர், உங்களது உழைப்பு, ஆசிரிய பெருமக்கள், உங்களுக்குக் கல்வி அளித்த இத்தகைய கல்வி நிறுவனங்களே காரணம். எனவே கல்வி கற்றுக்கொடுக்கும் அனைவரும் பல்லாண்டு வாழ்க" என்று பேசினார்.
இதையும் படிங்க:திமுக கூட்டணியில் யார் எந்த தொகுதி? - கனிமொழி எம்பி அளித்த பதில்!