தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணைக்காக ஆஜரான முன்னாள் சபாநாயகர்! - Case against Anitha Radhakrishnan - CASE AGAINST ANITHA RADHAKRISHNAN

Anitha Radhakrishnan: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு சாட்சிகளுள் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பி.தனபால் ஆஜரான நிலையில், அவரிடம் 1 மணி நேரத்திற்கு மோலாக விசாரணை நடைபெற்றது.

அனிதா ராதாகிருஷ்ணன், என்.ஆர்.தனபால்
அனிதா ராதாகிருஷ்ணன், என்.ஆர்.தனபால் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 4:29 PM IST

Updated : Jul 10, 2024, 4:52 PM IST

தூத்துக்குடி: கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2001 மே 14 முதல் 2006ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஐயப்பன் தலைமையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் அவரது மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் இந்த வழக்கின் 3 சாட்சிகளில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் தனபால் ஆஜராகினார்.

முதன்மை மாவட்ட நீதிபதி ஐயப்பன் முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மனோகரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கறிஞர் சேது ஆகியோர் முன்னாள் சபாநாயகர் தனபாலிடம் 1 மணி நேரத்திற்கு மேலாக குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர், வழக்கு விசாரணையை இம்மாதம் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஐயப்பன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக, 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. பின்னர், 2009ஆம் ஆண்டு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்று பெற்ற அவர், 2011-2016 காலக்கட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், அப்போது அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கினர்.

எம்எல்ஏ மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற நிலையில், அப்போது சபாநாயகராக இருந்த தனபால் இந்த வழக்கிற்கு அனுமதி வழங்கினார். அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் மொத்தம் 108 சாட்சியங்களில் முன்னாள் சபாநாயகர் தனபாலும் உள்ளார்.

இந்நிலையில், தற்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் எதிரான வழக்கில் உள்ள மொத்தம் 108 சாட்சியங்களில் தற்போது வரை 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:“தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை” - டிடிவி தினகரன் காட்டம்!

Last Updated : Jul 10, 2024, 4:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details