கோயம்புத்தூர்:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
குறிப்பாக, கரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அதனால் தான் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றாலும், செந்தில் பாலாஜியின் செல்வாக்கு இன்னும் கோயம்புத்தூரில் அதிகமாக உள்ளதாக திமுகவினர் கருதுகின்றனர். செந்தில் பாலாஜியின் ஜாமீன் விவகாரம் தொடர்பாக வரும் செய்திகள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களிடையே கலக்கம் அடையச் செய்துள்ளது.
இதனால் அவசர அவசரமாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் செந்தில் பாலாஜியின் படத்தை முகப்புப் படமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பது போல ஸ்டேட்டஸ்களையும் போட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ‘அரசன் அரசன் தான்’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். ஒரு சிலர் அவரின் பழைய வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இவை அனைத்தும் செந்தில் பாலாஜியால் அவர்கள் பெற்ற பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்கு தான் என்கின்றனர் செந்தில் பாலாஜியின் தொண்டர்கள். இது குறித்து செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கூறுகையில், “2022-இல் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கோயம்புத்தூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 73 திமுக மாமன்ற உறுப்பினர்கள், 159 நகராட்சி உறுப்பினர்கள், 378 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 610 பேர் இவரால் பலனடைந்தவர்கள்.