தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாததற்கு இதுதான் காரணமா? - ப.சிதம்பரம் பரபரப்பு பதிவு! - Vikravandi by election - VIKRAVANDI BY ELECTION

Vikravandi by election: பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை, அதிமுக புறக்கணித்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் (Image Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 11:00 AM IST

Updated : Jun 16, 2024, 11:22 AM IST

சென்னை:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபையின் பிரதான எதிர்கட்சியான அதிமுக, வேட்பாளராக யாரை களமிறக்க உள்ளது என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சி தலைமை நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில், மேலிடத்தில் இருந்து உத்தரவு என்பதற்கான சான்று. பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும், பினாமி (பாமக) மூலம் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணி, திமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"இன்று இல்லாவிட்டால் நாளை வெற்றி பெறுவோம்" வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி! - dr krishnasamy

Last Updated : Jun 16, 2024, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details