சென்னை:துரைப்பாக்கத்தில், வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்ற முயன்ற வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
துரைப்பாக்கம் மகாலட்சுமி நகரில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நில பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக சிலர் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். அதில் 47 வீடுகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி, அதனை மீட்க அதிகாரிகள் நீண்ட காலமாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், இவர்கள் அனைவருக்கும் பெரும்பாக்கத்தில் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குலசை அம்மனுக்கு சுமார் அரை கோடி ரூபாய் வருவாய்!
ஆனால், குடியிருப்பு வாசிகள் இப்பகுதியில் இருந்து மாற்று இடத்திற்குச் செல்லவும், வீடுகளை இடிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை (நவ.23) ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 47 வீடுகளை இடிக்க, போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், அவர்களை உள்ளே விடாமல் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புiகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் (Credits - ETV Bharat Tamil Nadu) இதனையடுத்து, அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது, ஆக்கிரமிப்பு வீடுகளைகளை இடித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்