தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுத பூஜை எதிரொலி: கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு! மல்லிகை, கனகாம்பரம் எவ்வளவு?

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், இருந்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 12:43 PM IST

பூக்கள் கோப்புப்படம்
பூக்கள் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:நாடு முழுவதும் தசரா பண்டிகையின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையும், பத்தாவது நாளான நாளை விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜையும் சேர்த்து ஆயுத பூஜையும் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்ததாலும், பண்டிகை நாள் என்பதாலும் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும்,

இதுகுறித்து கோயம்பேடு பூக்கள் விற்பனை சங்க நிர்வாகி செல்வராஜ் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் கூறுகையில், "ஐஸ் மல்லி ரூ.800-க்கும், மல்லி ரூ.1,000-க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,100-க்கும், சாமந்தி ரூ.260-க்கும், சம்பங்கி ரூ.500-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.180-க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.350-க்கும், அரளிப்பூ ரூ.500-க்கும், கோழிகொண்டை பூ ரூ.100-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: புரட்டாசியே பிறக்கல.. அதுக்குள்ளேயா.. ஜெட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை விலை!

தற்போது பூக்களின் விலை இருமடங்காக விற்பனை செய்யப்பட்டாலும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், ஆயுத பூஜை என்பதால் தென்னை குருத்து தோரணம் ரூ.30-க்கும், மாவிலை தோரணம் ரூ.20-க்கும், வாழைக்கன்று ரூ.40-க்கும், பொரி ஒரு படி ரூ.30 முதல் 40-க்கும், தேங்காய் ரூ.30-க்கும், அவல் ரூ.100 முதல் 120-க்கும், உடைத்த கடலை ரூ.100 முதல் 110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் பொருட்கள் புறநகர்ப் பகுதிகளில் ரூ.20 முதல் 30 வரை கூடுதலாக விற்பனையாகும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details