சென்னை:சென்னை பரங்கிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலந்தூர் பகுதியில் நேற்று(ஜூலை 18) இரவு ஆய்வாளர் பாலன் தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் இரண்டு பெண்களை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தார்.
ஆட்டோவை ஓட்டி வந்த கதிர்வேலு என்பவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் இரு பெண்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியதோடு, ஆட்டோவையும் சோதனை செய்தனர். அப்போது, பெண்கள் அமர்ந்திருந்த சீட்டிற்கு கீழே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டது.
பின்னர், அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கே.கே.நகரை சேர்ந்த கதிர்வேலு, தேவி, லட்சுமி, காமராஜ் மற்றும் முருகன் ஆகிய ஐந்து பேரை கைது செதனர்.