தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலாம் ஆண்டு மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் உதவித்தொகை! - scholarship

Sarojini Damodaran Foundation: 2023-2024 கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் உதவித்தொகை
முதலாம் ஆண்டு கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் உதவித்தொகை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 12:13 PM IST

சென்னை: 2023 - 2024ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கிடும் வகையில் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகையானது, ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,000‌ முதல் 75,000 வரையில் கல்வி தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். மேலும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் 12ஆம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

முதலாம் ஆண்டு கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் உதவித்தொகை

தற்போது கல்வி ஆண்டில் (2023-2024) முதலாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கு கீழ் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறன் சதவீதமானது 40 சதவீதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் பெற்றிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் 31.1.2024-க்குள் www.vidyadhan.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வி உதவித்தொகை குறித்தான விவரங்களை vable@sdfoundationindia.com‌ என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமானத்தை கண்டுபிடித்த நீர் மூழ்கி.. முதல் காட்சியை வெளியிடும் ஈடிவி பாரத்!

ABOUT THE AUTHOR

...view details