தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட கொக்குகுளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சக்தி ஈஸ்வரன் மற்றும் ராமலட்சுமி தம்பதியினர். இவர்கள் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் தயாரிக்கும் மூலப்பொருள்களை வாங்கி வந்து, அதனைத் தயார் செய்து அங்குள்ள திருவிழாக்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈஸ்வரன் மற்றும் ராமலட்சுமி தம்பதியினர் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது மனைவி ராமலட்சுமி தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.