தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணமோசடி செய்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற திரைப்பட தயாரிப்பாளர் கைது! - Film producer arrested - FILM PRODUCER ARRESTED

Film Producer arrested: கோவையைச் சேர்ந்த உதய சங்கர் என்பவரிடம் திரைப்படம் எடுப்பதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட தயாரிப்பாளர் ஜானி தாமஸை, வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் புகைப்படம்
கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 3:06 PM IST

கோயம்புத்தூர்: கேரளாவைச் சேர்ந்த ஜானி தாமஸ் என்பவர், ஜானி சகாரிகா என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்து விநியோகித்து வருகிறார். இவர் பல்வேறு படங்களுக்கு விநியோகஸ்தராகவும், பைனான்சியராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கத்தாரில் பணிபுரிந்து வந்த கோவை வடவள்ளியைச் சேர்ந்த துவாரக் உதயசங்கர் என்பவருக்கும், ஜானிக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது 5 படங்களை தயாரிக்கப் போவதாகவும், புதிய படங்களில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என துவாரக்கிடம் ஜானி தாமஸ் மற்றும் அவரது மகன் உறுதி அளித்துள்ளனர். இதை அடுத்து, முதல் கட்டமாக 75 லட்சம் ரூபாயை துவாரக் முதலீடு செய்துள்ளார்.

இதை வைத்து ’நான்சென்ஸ்’ என்ற ஒரு திரைப்படத்தை ஜானி தாமஸ் தயாரிக்கத் தொடங்கி, இரண்டாம் கட்டமாக இரண்டு கோடி ரூபாயை துவாரக் ஜானியிடம் வழங்கியுள்ளார். பின்னர், 2018ஆம் ஆண்டு பணத்தை திரும்ப கேட்டபோது, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜானி மற்றும் அவரது மகன் ரான் ஜானி ஆகியோர், சில நாட்கள் கழித்து 50 லட்சம் ரூபாயை மட்டும் லாபம் எனக் கூறி உள்ளனர்.

மீதி பணத்தை திரும்ப கேட்டபோது காலம் தாழ்த்தி வந்ததால், கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜானி மற்றும் அவரது மகன் ரான் ஜானி ஆகியோர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்த நிலையில், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ஜானி தாமஸை கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில் வைத்து கொச்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன், நேற்று ஜானி தாமஸை கைது செய்து, அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை" - ஸ்டார் நாயகி பிரீத்தி முகுந்தன்! - Star Film Heroine Preity Mukhudhan

ABOUT THE AUTHOR

...view details