தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை கர்ப்பமாக்கிய நபர்.. 2 மாதங்களுக்குப் பிறகு சிக்கியது எப்படி? - sexually assault - SEXUALLY ASSAULT

Sexual Assault: ஈரோட்டில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 8:19 PM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது நபர், கணவரை இழந்து மகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், முதல் கணவருக்கு பிறந்த சிறுமியும் இவர்களுடனே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது தந்தை நிலையில் இருக்கக்கூடிய நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து, அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் கருவை கலைக்க முயன்று சிறுமியை கடந்த ஜூன் 26ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். பின்னர், இது குறித்து அந்நபர் மீது சிறுமியின் தாய் பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த இரு மாதங்களாக தனிப்படை போலீசார் அந்நபரை தேடி வந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சிறுமியுடன் அந்நபரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் உமாபாரதி முன் ஆஜர்படுத்தினர்.

வழக்கு குறித்து பவானிசாகர் போலீசார் கூறியது, “வாழைக்காய் தொழிலாளியான இவர், தன்னுடன் வேலை செய்துகொண்டிருந்த கணவரை இழந்து சிறுமியுடன் வாழ்ந்து வரும் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமானவுடன் முதல் கணவருக்கு பிறந்த மகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார். பின்னர், இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இந்நிலையில், பாட்டி வீட்டில் 10ஆம் வகுப்பு வரை படித்து வந்த தனது மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கர்ப்பமாக்கி உள்ளார்.

இதுவெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய அந்நபர், கருவை கலைக்க முயன்று சிறுமியை கடத்திச் சென்று விட்டார். இது சிறுமியின் தாய்க்கு தெரியவந்ததும் பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார். இரு மாதங்களுக்குப் பின் சிறுமியுடன் அவரும் போக்சோவில் கைதாகி உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :நெல்லை மக்களுக்கு 'அல்வா' செய்தி.. அமைகிறது தேசிய பேரிடர் மீட்பு மையம்.. பின்னணி என்ன? - nellai National Disaster Center

ABOUT THE AUTHOR

...view details