தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் பைக் மற்றும் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. தந்தை, மகன் இருவரும் உயிரிழப்பு! - THENI ROAD ACCIDENT

தேனியில் பைக் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனம் இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான வாகனங்கள் புகைப்படம்
விபத்துக்குள்ளான வாகனங்கள் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 9:05 AM IST

தேனி:பெரியகுளம் அருகே பைக் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனம் இரண்டும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலை, D.வாடிப்பட்டி பிரிவு பகுதியில் நேற்று (ஜன.1) அதிகாலையில் பெரியகுளத்தில் இருந்து G.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) மற்றும் அவரது மகன் வீரமுத்து (வயது 30) இருவரும் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது எதிரே வந்த சிறிய ரக சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்துள்ளது. எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனமும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த நபர்கள் விரைந்து வந்து மீட்டுள்ளனர். ஆனால், இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில், இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க:போர்வெல் குழிக்குள் இருந்து 10 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

இதற்கிடையே, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் பலியானவர்களின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தற்போது, நேற்று புத்தாண்டு தினத்தன்று வாகன சென்ற தந்தை, மகன் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details