சேலம்:அயோத்தியாபட்டணம் அருகில் உள்ளது மாசி நாயக்கன் பட்டி. இங்கு உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (54) இவர் நோட்டுப் புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன் (30), பி.இ. இவர் படித்துவிட்டு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தார். மகள் பூஜா (23) பி.காம் படித்துவிட்டு கோவையில் தங்கி சி.ஏ. படிப்பதற்கான பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
பூஜா விடுமுறையில் தற்போது சேலத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவருக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதை பார்ப்பதற்காக நிர்மலா நேற்று (ஜன.26) காலை வீட்டிலிருந்து சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து இருந்துள்ளது.
உள்ளே சென்று நிர்மலா பார்த்த போது படுக்கை அறையில் கழுத்தில் காயத்துடன் மரக் கட்டிலில் மகள் பூஜா இறந்த நிலையிலும், அதன் அருகில் கணவர் வெங்கடேஸ்வரன், மகன் ரிஷிகேசன் இருவரும் தற்கொலை செய்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்துள்ளனர்.