தஞ்சாவூர்:நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 4ஆம் கட்ட தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதிக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தற்போது வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக வாரணாசிக்குச் சென்று அங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று (மே 10) காசி தமிழ் சங்கமம் (கன்னியாகுமரி முதல் பனாரஸ் வரை) விரைவு ரயிலில் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்து புறப்பட்டனர்.