தேனி:ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவ தம்பதி வேல்முருகன் மற்றும் கோமதி. விவசாயம் செய்து வரும் இவர்களது இரண்டரை ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டம் மற்றும் நிலம் கிராமத்தின் அருகே உள்ளது.
இந்த நிலையில், பட்டா செய்யப்பட்ட இந்த தோட்டத்தில் தினந்தோறும் இரவில் அதே கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் அரசு அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக செம்மண் கிராவல் அள்ளி, ஆண்டிபட்டி மற்றும் தேனி பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இதே போன்று பல்வேறு இடங்களிலும் இரவில் திருட்டுத்தனமாக மண் மற்றும் செம்மண் கிராவல் அள்ளி தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தினமும் இரவில் இதுபோன்று ஏராளமான அளவில் மண் திருடப்படுவதால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விவசாயமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.