தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரஸ்பர விவாகரத்து: நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்குச் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு! - Dhanush Aishwarya divorce case - DHANUSH AISHWARYA DIVORCE CASE

Actor Dhanush and Aishwarya divorce: விவாகரத்து தொடர்பாக, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அக்டோபர் 07ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:14 PM IST

சென்னை:பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவரையும் அக்டோபர்.07 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும், குடும்பத்தாரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு தாங்கள் பிரிந்துள்ள செய்தியை இருவரும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையைத் தீர்க்க ஈடுபட்டதாகவும், ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர்.

இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, மனுவை ஏற்ற நீதிபதி, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் அக்டோபர் 07 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு; காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - RAJESH DAS CASE

ABOUT THE AUTHOR

...view details