தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திருவொற்றியூரில் மட்டும் 30 ஆயிரம் வாக்குகள் நீக்கம்" - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் பகிரங்க குற்றச்சாட்டு!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் 30 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் பட்டியலில் இணைக்க பணியாற்ற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் (Credits - ETV Bharat Tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 4:06 PM IST

சென்னை :சென்னை, திருவொற்றியூர் அதிமுக மேற்கு பகுதி சார்பில் வட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பாகமுகவர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பகுதிச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக 7வது வார்டு கவுன்சிலர் கார்த்திக், பகுதி பொருளாளர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய 7வது வார்டு கவுன்சிலர், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவொற்றியூரில் 30 ஆயிரம் அதிமுக வாக்குகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அதிமுக வாக்குகள் எடுக்கப்பட்டுவிட்டன. அதனை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்க நாம் பணியாற்ற வேண்டும்.

திருவொற்றியூர் 7வது வார்டில் உள்ள ஒவ்வொரு பாகத்திலும் சுமார் 400 முதல் 500 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூரில் உள்ள 311 பாகத்திலும் அனைத்து முகவர்களும் கடந்த தேர்தலில் காணாமல் போன வாக்குகளை சேர்க்க களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பகுதி செயலாளருமான குப்பன் கூறுகையில், "தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரே கட்சி அதிமுக தான். எத்தனை புதிய கட்சிகள் தமிழகத்தில் வந்தாலும், திமுகவை வீழ்த்தி மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் ஒரே கட்சி அதிமுக தான்.

திருவொற்றியூரில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான அதிமுக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதனை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைத்து 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றியடைவதை உறுதி செய்யும் வகையில் நாம் களப்பணியாற்ற வேண்டும்.

இதையும் படிங்க :போலி ஆசிரியர் விவகாரம்: திருவள்ளூர், விழுப்புரம், தருமபுரி சம்பவங்கள் குறித்து அதிகாரி பதில்!

அதிமுக என்பது தொண்டர்களுக்கான கட்சி என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக காண முடிகிறது. கட்சியில் இருந்த பல சந்தர்ப்பவாதிகள் தற்போது காணாமல் போயுள்ளனர். தற்போது அதிமுக பொதுச் செயலாளரும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை தெரிந்து கொள்ளும் வகையில் மக்களை சந்திக்கும் தனது களப்பணியை துவக்கியுள்ளார்.

மேலும், எண்ணூர் பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள கோரமண்டல் ரசாயண தொழிற்சாலைக்கு எதிராகவும், அதனை விரைவில் மூட வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், அனைத்து பாகத்திற்குமான அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான இக்கூட்டத்தில் படிவங்கள் வழங்கப்பட்டன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details